எனது அமெரிக்க விஜயத்தின் ஒரு பகுதியாக சில வெள்ளைக்கார அமெரிக்கர்களை சந்தித்து இந்தியாவில் மோடி தலைமையிலான புதிய அரசு பற்றி அவர்களுடைய கருத்துக்களை கேட்க முடிவு செய்திருந்தேன்..

அதற்காக ஒரு செனட்டர் ( எம்.பி.)ஒரு பத்திரிக்கையாளர், ஒரு பிசினஸ்மேன்,ஒரு பணியாளர், ஒரு இல்லத்தரசி, ஆகியோரை தெரிவு செய்து அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன்..

என் மகன் தேஜஸ்..பட்டமேற்படிப்பு படிப்பவர்–அவருடன் நான் பல்வேறு விஷயங்களை விவாதிப்பதுண்டு..அவருடைய கருத்துக்கள் பலமுறை என் சிந்தனையை தூண்டியதுண்டு..

தமிழகத்தின் லேட்டஸ்ட் அரசியல் பற்றி பேச்சு வந்தது..

"டெல்லி மேல்சபையில் நமக்கு மெஜாரிட்டி இல்லை..எதிர்காலத்தில் நமக்கு "ஜெ"யின் ஆதரவு தேவை..காங்கிரசுக்கு அடுத்தபடி எஸ்பி/பிஎஸ்பி தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்..நமக்கு நேசக்கரம் நீட்டும் தூரத்தில் 'ஜெ' மட்டுமெ இருக்கிறார்."–என்றெல்லாம் விளைக்கி வந்தவர் –என்னுடைய அமெரிக்க "மோவ்" பற்றி தெரியாமலே அவர்– சொன்ன விஷயத்தின் சாரம் இதோ..

"அமெரிக்காவிற்கு இந்தியாவின் மீது உள்ள ஆர்வம் "வியாபாரம் " மட்டுமே..இதே நோக்கில்தான் உலகநாடுகள் பலவற்றை அது கபளீகரம் செய்துள்ளது..இது கைகூடாமல் போகும் போதெல்லாம், அது "மனித உரிமையை" கைய்யிலெடுக்கும்.

குஜராத்தில் மனித உரிமை மீறல் என மோடியை சொல்ல அமெரிக்காவிற்கு என்ன தகுதி இருக்கிறது? முஸ்லீம்கள் மீது அமெரிக்காவீற்கு உண்மையான அக்கரை இருக்குமானால், ஆஃப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாலஸ்தீனிலும், முஸ்லீம்களை கொன்று குவித்தது ஏன்?

உலக மனித உரிமை மீரலின் ஒட்டுமொத்த காண்ட்ராக்ட் அமெரிக்காவிடமே இருக்கிறது..அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்தியா தனது உரிமைகளை விட்டுக்கொடுத்து "பெரும் வியாபார லாபம்"–பெற்றுத்தந்ததால், மன்மோகன் சிங் அரசை அமெரிக்கா புகழ்ந்து வந்தது..

இந்த விஷயங்கள் மோடியிடம் பலிக்காது என்பது அமெரிக்காவுக்கு தெரியும்..விளைவு விசாவே கேட்காத மோடிக்கு விசா மறுத்ததாக விளம்பரம் செய்தது..தேர்தல் வெற்றிக்கு பின் இன்று மோடி பின்னாலே ஓடிவருகிறது..

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலகமும், தொடர்ந்து புது அரசை புகழ்ந்து வருகிரது..மோடியின் "திடமே" அமெரிக்காவின் "திமிருக்கு" பதில் சொல்லியுள்ளது..,

அமெரிக்காவின் கருத்துக்கள்–புகழ்ச்சிகள், நமக்கு தேவை இல்லை..
இது புரியாத சில "அமெரிக்க அடிவருடிகள்"-போல நீங்களும், "அமெரிக்கவின் கருத்து"–என எதுவும் எழுதிவிடாதீர்கள்..என்றார்..

இதற்கிடையே சம்பந்த பட்ட அமெரிக்கர்களை நான் சந்தித்தேன்..மோடி அரசு பற்றி எந்த கேள்வியும் கேட்க வில்லை..அவர்களே நம்மை புகழ்ந்தார்கள்..

நம்மை நாம் மதித்தால் மற்றவர்கள் மதிப்பு நமக்கு தேவையே இல்லை..

உலகின் குருவாக ஆகப்போகும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நாம்..

நம்முன் அமெரிக்கா ஜுஜுபியா?–சுண்டெலியா?–பெரியவன்  இல்லை..இல்லையா?

எதுவென நீங்களே தீர்மானியுங்கள்.

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply