மத்திய அமைச்சராக இருந்த கோபி நாத் முண்டே மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடிதம் எழுதியுள்ளார் .

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்து வந்த கோபிநாத் முண்டே, கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால் சதியால் இந்தவிபத்து நடந்துள்ளதா என்ற கேள்வி வலுத்து வருகிறது. கோபிநாத் முண்டே மரணம் குறித்து சிபிஐ. விசாரணை நடத்தவேண்டும் என மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர பத்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய குடியரசு கட்சித்தலைவர் அத்வாலே உள்ளிட்ட தலைவர்கள் கோரியுள்ள நிலையில் இதை சரத் பவாரும் வலியுறுத்தியுள்ளார்

Tags:

Leave a Reply