மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர் , நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சர்களாக உள்ளனர் , அவர்கள் இருவரும் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உறுப்பினர்களாக இல்லை, எனவே அவர்களை ராஜ்யசபா எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

இன்னும் ஆறு மாதத்திற்குள், லோக் சபா அல்லது ராஜ்யசபா எம்.பி.,க்களாக ஆகவேண்டும். மகாராஷ்டிராவில் இருந்து, ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாவடேகரின் பதவிக்காலம், ஏற்கனவே முடிவடைந்து விட்டது. மபி., மற்றும் ஆந்திராவில் காலியாகவுள்ள ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் 19ல், நடைபெறவுள்ளது. இதனால், ஜாவடேகரை, ம.பி.,யிலும், நிர்மலா சீதாராமனை ஆந்திராவிலும், ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்க, பாஜக., மேலிடம் திட்டமிட்டுள்ளது. ம.பி.,யில் பாஜக.,வுக்கு போதுமான, எம்.எல்.ஏ.,க்கள் பலம் இருப்பதாலும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு இருப்பதாலும், இந்தமுடிவு எடுக்கப்பட்டதாக, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

Leave a Reply