மூன்று வருட தாமதத்திற்கு பிறகு, மும்பையில் மெட்ரோ ரயில்சேவை நாளை முதல் தொடங்குகிறது. புறநகர் ரயில் சேவையைமட்டுமே தினமும் பயன் படுத்தி வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு மெட்ரோ ரயில் சிறந்த மாற்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

உள்ளூர் பாஜக எம்.பி க்ரித் சோமையா, மெட்ரோ ரயில் சேவையை மேலும் தாமதம் செய்தால் வலுக்கட்டாயமாக மெட்ரோ சேவை துவங்கப்படும் என எச்சரித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே வாரியமும் இதற்கான அனுமதியை அளித்துள்ளது.

4 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு ரயில் என தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 200 – 250 முறை ரயில் இயங்கும் என்றும், இதில் 11 லட்சம்பேர் பயணப் படுவார்கள் என்றும் ஒரு பெட்டியில் 372 பயணிகள் வீதம், ஒருரயில் 1500 பயணிகளைத் தாங்கி செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ஒன் தனியார் நிறுவனம், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு, வியோலியா போக்குவரத்து மற்றும் மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஆகிய அமைப்புகளின் கூட்டு நிறுவனமாகும்

Leave a Reply