புதிய ஆந்திரத்தின் முதல் முதல்வராக தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக் கிழமை பதவியேற்று கொண்டார்.

அவருடன் 3பெண்கள் உள்பட 19 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டனர். அவர்களில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

விஜயவாடா அருகேயுள்ள நாகார்ஜுனா நகரில் ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 7.27 மணிக்கு சந்திர பாபு நாயுடுவுக்கு, ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து, கே.இ. கிருஷ்ணமூர்த்தி, யனமல ராமகிருஷ்ணுடு, தேவிநேனி உமாமகேஸ்வர ராவ், அய்யன்னபட்ருடு,பல்லே ரகுநாத் ரெட்டி, சின்ன ராஜப்பா, பட்டிபாடி புல்லா ராவ், கண்டா ஸ்ரீநிவாச ராவ், போஜ்ஜல கோபால கிருஷ்ண ரெட்டி, பரிடால சுனிதா,பீதாலா சுஜாதா, கிமிடி மிருணாளினி, பி.நாராயணா உள்ளிட்ட 19 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் பாஜகவைச் சேர்ந்த காமிநேனி ஸ்ரீநிவாஸ், மாணிக்யாலா ராவ் ஆகியோரும் அடங்குவர்.

விழாவில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அனந்த்குமார், கல்ராஜ் மிஸ்ரா, பிரகாஷ் ஜாவடேகர், நிர்மலா சீதாராமன், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், நாகாலாந்து முதல்வர் டி.ஆர். ஜெலிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply