பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி சந்தித்தது. மராட்டிய மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க சிவசேனா கூட்டணி 42 தொகுதிகளை கைப்பற்றி சாதனைபடைத்தது.

காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் தற்போது மராட்டிய மாநிலத்தில் நடந்துவருகிறது. 15 ஆண்டுகளாக பலமாக இருந்துவரும் இந்த கூட்டணி 6 எம்.பி. தொகுதிகளை மட்டுமே பிடிக்கமுடிந்தது. பா.ஜனதா–சிவசேனா கூட்டணி காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளது . இதிலும் பா.ஜ.க சிவசேனா கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் 288 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. இதில் பா.ஜ.க–சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான 145 இடங்களுக்கு அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும். இந்தகூட்டணி 248 இடங்கள் வரை பெறவும் வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முடிவுக்குவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply