பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேதராவுக்கு விமானநிலையத்தின் பாதுகாப்பு சோதனையிலிருந்து விலக்களிக்கும் எண்ணமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அச்சுறுத்தலின் அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மேலும், சோனியா காந்தியின் குடும்பம் தொடர்ந்து அதிகப் பட்ச அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகிறது. இதுப் போன்றவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பாதுகாப்பு அமைப்புக்கள் சில வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன. இவற்றை உடனடியாக மாற்றிவிடமுடியாது. அப்படி மாற்றினால் ஏதும் அசம்பாவிதம் நடைப்பெறும் போது மத்திய அரசுக்கு மிகவும் பாதகமாக அது அமைந்துவிடும். எனவே, பிரியங்கா தமது கணவருடன் விமான நிலையம் செல்லும் போது இருவருக்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். ஆனால், ராபர்ட் வதேரா தனியாக விமான நிலையம் செல்லும் போது இந்த பாதுகாப்பு இருக்காது என்பதுக் குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply