மக்களவையும், டெல்லி மேல்சபையும் இணைந்த கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திங்கட் கிழமை உரை நிகழ்த்தினார். இதற்கு சற்றுமுன் சபைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு எட்டாவது வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அருகில் சென்று சந்தித்து, தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

அப்போது ராகுலும், மோடியும் சில வார்த்தைகளை பரிமாறி கொண்டனர். மேலும் இருவரும் மாறிமாறி கைலுக்கி கொண்டனர்.

மேலும், பாராளுமன்றத்தில் அருகருகே அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், பாஜக மூத்த தலைவர் அத்வானியும் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply