ரயில் ஓட்டுநர்களும், பிற பணியாளர்களும் மது அருந்தி விட்டு பணிக்குவருவதை தடுப்பதற்காக, அவர்களுக்கு கட்டாய சுவாச பரி சோதனையை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்த உள்ளது .

இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள புதிய செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயில் ஓட்டுநர்கள், அவர்களது உதவியாளர்கள், ரயில்வே நிலையங்களை நிர்வகிப்பவர்கள், ரயில்களில் பயணிகளுக்கு சேவை யளிப்பவர்கள் ஆகியோர் தினமும் பணிக்கு வரும் போது அவர்கள் சுவாச பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் யாருக்கும் விதி விலக்கு கிடையாது.

பணியாளர்கள் குடித்திருந்தது தெரியவந்தால் அவர்களுக்கு அதிகபட்சமாக பணிநீக்கம், ஒரு ஆண்டு வரையிலான சிறை தண்டனைகள் விதிக்கப்படும்.

ரயில்வேயில் பணியாற்றும் 83,000 ஓட்டுநர்கள் ,உதவி ஓட்டுநர்களுக்கும், பிறபணியாளர்கள் சுமார் 10 லட்சம் பேருக்கும் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்படும்.

பணியாளர்களின் குடிப்பழக்கம் குறித்து அனைத்து விவரங்களையும் சேகரித்து பதிவுசெய்யும்படி அனைத்து மூத்த அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுவர். எந்த தற்காலிக ஊழியராவது குடிப்பழக்கத்துக்கு அடிமையானவராக தெரிந்தால், அவருக்கு பணிநிரந்தரம் வழங்கப்படக்கூடாது என்று புதிய விதிமுறை கூறுகிறது.

Leave a Reply