ம.பி.,யில் இருந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ டேகர், பிகாரில் இருந்து ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் சரத்யாதவ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மத்தியப்பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஃபகன்சிங் குலஸ்தே, மக்களவைத் தேர்தலில் மாண்ட்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமாசெய்ததால் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

பிகாரில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த லோக் ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவின் ராஜீவ் பிரதாப்ரூடி, ராம்கிருபால் யாதவ் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றனர்.

அதைத் தொடர்ந்து அந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே கடும்போட்டி நிலவியது.

இதில், ராம்விலாஸ் பாஸ்வான் ராஜிநாமாசெய்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத்யாதவ், போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.

மீதமுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளன.

இந்தபதவிகளுக்கு ஐக்கிய ஜனதாதள கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் வேட்புமனு தாக்கல் செய்துள்ள சுயேச்சை வேட்பாளர்கள் இது வரை தங்களது வேட்பு மனுக்களை வாபஸ்பெறாததால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply