பிரதமர் நரேந்திர மோடியை உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்தித்தார். உத்தரப்பிரதேச மாநில சட்டம், ஒழுங்கு நிலைபற்றி பிரதமரிடம் அகிலேஷ் யாதவ், இந்த சந்திப்பின் போது விவரித்ததாக கூறப்படுகிறது.

உ.பி., கடந்த 10 நாட்களில் மூன்று சிறுமிகள், ஒருபெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று தூக்கிலிடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பலாத்காரசம்பவம் அதிகம் நடப்பதால் அகிலேஷ் யாதவ் பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ், பாஜக கூறி வருகின்றன. பெண்கள் அமைப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றன. இதனால் அகிலேஷ் யாதவ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply