பிரேசில் நாட்டில் உலக கோப்பை கால்பந்துதொடர், தொடங்கியுள்ள நிலையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2014ம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை சிறப்பு தபால் தலையை, பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டார்.

பின்னர் பேசிய பிரதமர், குழந்தைகளின் வளர்ச்சிக்கு விளையாட்டு இன்றியமையாத ஒருஅங்கம் , விளையாட்டின் அவசியத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் சர்வதேச நாடுகளை ஒருங்கிணைக்கும் இணைப்புப் பாலமாக திகழ்வதாக கூறிய பிரதமர் மோடி, உலகக்கோப்பை கால்பந்தில் இந்தியாவின் பயணம் குறித்த தகவல்களை உள்ளடக்கிய இணைய தளத்தையும் இந்திய அஞ்சல்துறை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags:

Leave a Reply