அயோத்தி, வாரணாசி, மதுரா உள்ளிட்ட நகரங்களில் உள்ள மதவழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தகூடும் என்ற மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைதொடர்ந்து அந்த நகரங்களில் உள்ள அனைத்து இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறைசெயலர் அனில் கோஸ்சுவாமி தலைமையில், டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய ரிசர்வ்போலீஸ் படை டி.ஜி.பி., திலீப் திரிவேதி, உ.பி மாநில டி.ஜி.பி., பானர்ஜி, அம்மாநில உள்துறை முதன்மைசெயலர் தீபக்சிங் சிங்கால் உட்பட பலர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில்தான், மூன்று நகரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. .

Leave a Reply