மோடி வகித்துவந்த குஜராத் கிரி்ககெட்சங்க தலைவர் பதவிக்கு அமித்ஷா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குஜராத் முதல்வராக பதவி வகித்த போது அந்த மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் நரேந்திர மோடி பதவியில் இருந்தார். பிரதமராக பதவியேற்கும் முன்பாக அந்த பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. கிரிக்கெட்சங்க துணை தலைவர் பரிமால் நத்வானி, தலைவர் பதவிக்காக அமித்ஷா பெயரை முன்மொழிய, அதை யாரும் எதிர்க் காததால் ஒரு மனதாக அமித்ஷா தேர்வானார்.

Leave a Reply