மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாணுமாறு மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையால சிறைப்பிடிக்கப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதி மீனவர்களின் 23 படகுகளை விடுவிக்கவேண்டும், பாரம்பரிய கடல் எல்லையில் மீன் பிடி உரிமையை பெற்றுத்தரவேண்டும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பொன் ராதாகிருஷ்ணனை மீனவர்கள் சென்னையில் சந்தித்தனர்.

பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவபிரதிநிதிகள் பங்கேற்றனர். சந்ததிப்பிற்குபின் செய்தியாளரகளிடம் பேசிய மீனவபிரதிநிதிகள், தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்ததாக கூறினர்.

Leave a Reply