காவிரி நதிநீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க முழு ஆதரவு தரும் என்றார் பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் இல. கணேசன்.

கும்பகோணத்தில் சனிக் கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

காவிரி நதி நீர் பங்கீட்டு விஷயத்தில், மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ள கருத்துகள் நமக்கு சாதகமாக உள்ளன. நமக்குரிய நியாயமான உரிமைகள்கிடைக்கும் என நம்புகிறோம். தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல் படுத்திட வேண்டும் என்றார் இல. கணேசன்.

Leave a Reply