ஐஎன்எஸ். விக்ர மாதித்யா போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திரமோடி, ராணுவத் தொழில் நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெறவேண்டியது அவசியம் என கூறினார்.

இந்திய கடற்படையின் மிகப்பெரிய விமானந் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ். விக்ரமாதித்யாவை, பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார்.

கோவா கடல் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் போர்க்கப்பலில் வந்திறங்கினார். அவருக்கு, கடற்படையினர் அணிவகுப்பு மரியாதைசெலுத்தினர். இதை தொடர்ந்து, விக்ரமாதித்யா போர்க்கப்பல் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விவரித்தனர். மிக் 29போர் விமானத்தில் அமர்ந்த பிரதமர்மோடி, இந்திய கடற்படையினரின் வல்லமையை அறிந்தார்.

இதன் தொடர்ச்சியாக நடந்த நிகழ்ச்சியில், ஐஎன்எஸ். விக்ரமாதித்யா போர்க் கப்பலை, பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், அதிகாரிகள் மத்தியில் அவர் பேசினார்.
அதில், “அதி நவீன தொழில்நுட்பங்களுக்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டும். இதுவே, நாட்டுக்கு உறுதுணையாக அமையும். நாம் ஏன் ராணுவ தள வாடங்களை ஏன் இறக்குமதி செய்யவேண்டும்? இந்தத் துறையில் நாம் தன்னிறைவு பெறவேண்டும். மற்ற நாடுகளுக்கு நம்மால் ராணுவ தளவாடங்களை ஏன் ஏற்றுமதி செய்யமுடியாது?” என்று பிரதமர் மோடி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply