ஜார்கண்ட் மாநிலத்தில் மின் தடையை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது மின்வாரிய அதிகாரியை தாக்கியதாக கூறி பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா உள்பட 55பேர் கடந்த 3ந் தேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிந்ததை

தொடர்ந்து யஷ்வந்த் சின்கா உள்பட அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேற்றும் அவர்கள் ஜாமீன் கோராததால், அவர்களின் காவலை வருகிற 28–ந் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக.,வின் மூத்த தலைவர் அத்வானி, இன்று (செவ்வாய்க்கிழமை) ஹசாரி பாக் சென்று யஷ்வந்த் சின்காவை சந்திக்கிறார்.

Leave a Reply