உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியைக் காண வருமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இறுதிப்போட்டி வரும் ஜூலை 13-ம் தேதி ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது.

இறுதிப் போட்டியை காண வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் அதிபர் தில்மா ரவுசஃப் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் பிரேசில்செல்வது தொடர்பாக பிரதமர் மோடி இறுதிமுடிவு எடுக்கவில்லை எனத்தெரிகிறது.

Leave a Reply