காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற உணவுபொருட்களின் விலை உயர்வுகாரணமாக, பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டு பருவ மழை போதியளவு பெய்யாது என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இதனால், விலைவாசி மேலும் உயரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஈராக்கில் மூண்டுள்ள உள்நாட்டுபோரால், கச்சா எண்ணெய் விலை உயர்வதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும் அதுவழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் உயர்ந்துவரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி கூட்டினார். அதில், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன்சிங், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, மத்திய உரத்துறை அமைச்சர் அனந்த குமார், மத்திய உணவு, சிவில் சப்ளை துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பணவீக்கத்தை சமாளிப்பதற்கான வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Leave a Reply