மோடி புகழ் பாடும் மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை வர வர அதிகரித்து கொண்டே வருகிறது. பிரதமர் மோடியை, முன்னாள் அமைச்சர், சசிதரூர், ‘இரண்டாம் தலைமுறைக்கான சிறந்த தலைவர்’ என, பாராட்டியது போன்று , முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும், பிரதமர் மோடியை, ‘இந்தியாவின் நிக்சன்’ என, புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

இது குரித்து மேலும் கூறியதாவது ‘இந்தியாவின் நிக்சன் போல், மோடி திகழ்கிறார்’ .அமெரிக்கா வுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு நிலவாத காலகட்டத்தில், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு, இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வளர்த்தவர் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் நிக்சன். இந்நிலையில் இந்தியா – சீனா உறவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் மோடியை, ஜெய்ராம்ரமேஷ், இந்தியாவின் நிக்சன்’ என,பாராட்டியுள்ளார்.

Leave a Reply