மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) சென்னை வருகிறார்.

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னை வரும் அவரை வரவேற்க தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தில்லியில் இருந்து மாலை 4.30 மணிக்கு சென்னை வரும் அவருக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வரும் அவர் அங்கு கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.

Leave a Reply