ஈராக்கில் இந்தியர்களின் நிலைகுறித்து ஆய்வுசெய்ய, பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் உயர் நிலைக்குழு, 2014 ஜூன் 20 அன்று புது தில்லியில் கூடியது.

இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசியபாதுகாப்பு ஆலோசகர், காபினெட் செயலாளர், வெளியுறவுத் துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அரசுக்கு இதுவரை கிடைத்த தகவலின்படி., ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிசெய்வதில் அரசு தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. இந்தப்பணி, அரசின் அதி உயர் முன்னுரிமைப் பணியாக உள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply