பாட்னாவில் கட்டப்பட்டுவரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ் மருத்துவமனை) வாஜ்பாய் பிறந்த நாளன்று திறக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்தார்.

எய்ம்ஸ் கட்டுமானப் பணியை ஆய்வுசெய்த ஹர்சவர்தன், மருத்துவமனை பேராசிரியர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

எய்ம்ஸ் கட்டுமான பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என்றும், எவ்வளவு செலவு ஆனாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்கவேண்டும் என்றும் அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதி இந்த மருத்துவமனையை பிரதமர் நரேந்திரமோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பார் என்று அவர் கூறினார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 2004ம் ஆண்டில் பாட்னா உள்பட 6 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட திட்டமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply