நாடுதழுவிய அளவில் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கை மாற்றி அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார் .

அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று கூறிய அவர் மாணவர்களுக்கு அறிவைபோதிக்கும் வகையில் அது இருக்கும் என தெரிவித்தார்.

பல்கலைக் கழக மானியக் குழு மாற்றி அமைக்கப்படும் என்று கூறியுள்ள அவர் பாஜக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிபடி கல்வித் துறையில் மாறுதல்கள் உருவாக்கப்படும் என்றார்.

Leave a Reply