மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக, ஜூன் 21 அன்று, வேட்புமனு தாக்கல்செய்தார்.

ஆந்திராவில் காலியாக இருக்கும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு, அடுத்தமாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த இடத்துக்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், ஜூன் 21 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவர், தன் வேட்பு மனுவை சட்டமன்றச் செயலாளரிடம் வழங்கியபோது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக ஆந்திர மாநிலத் தலைவர் அரி பாபு, தெலுங்கானா மாநிலத் தலைவர் கிஷன்ரெட்டி, தெலுங்கு தேசம், பாஜக. தலைவர்களும் உடன் இருந்தனர் . பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி , மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமனை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply