பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானியை குடியரசுத் தலைவராக்குவதே, அவரது அனுபவத்துக்கும், திறமைக்கும் சரியானபதவியாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வாஜ்பாய் ஆட்சியின்போது துணை பிரதமராகப் பதவிவகித்த அத்வானிக்கு, மக்களவை தலைவர்பதவியை அளிப்பது ஏற்புடையதாக இருக்காது என தெரிவித்தார்.

அவரது நீண்டகால அரசியல் வாழ்க்கையின் காரணமாக, குடியரசு தலைவர்பதவிக்கு தகுதியானவர் அத்வானி என்றும் கட்கரி கூறினார்.

மத்திய அமைச்சரவையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடம்பெறக்கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடி எடுத்த முடிவு சரியானதுதான் எனத் தெரிவித்த கட்கரி, திட்டக் கமிஷன் துணைத்தலைவராக முரளி மனோகர் ஜோஷி விரும்பியதாக வெளியான தகவலையும் மறுத்துள்ளார்.

Leave a Reply