நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ளவேண்டிய விதம் குறித்து பா.ஜ.க எம்.பி-க்களுக்கு இரண்டு நாள் சிறப்புபயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோடி தலைமையிலான அரசின் முதல்பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ளது.

ரயில்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடும் நிதி நெருக்கடி, மற்றும் பொருளாதார மந்த நிலையை சரிகட்டும் விதமாக பட்ஜெட்டிலும் சில கடுமையான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் அனல்பறக்கும் விவாதம் நடைபெறும் என தெரிகிறது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்க பாஜக தயாராகிவருகிறது. குறிப்பாக பாஜக.,வின் புதிய எம்பி-க்களுக்கு நாடாளுமன்றத்தில் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து வரும் 28, 29 தேதிகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply