பாஜகவில் எந்தப் பதவி கொடுத்தாலும், அதை ஏற்கத் தயாராக உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும், அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், மைசூரில் ஞாயிற்றுக் கிழமை தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி, கர்நாடகத்தில் பா.ஜ.க.,வை பலப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவேன். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக அனைத்துக்கட்சி மக்களவை உறுப்பினர்களும் ஒன்றுமையுடன் செயல்பட முடிவு செய்துள்ளோம். கர்நாடக பா.ஜ.க தலைவர் பதவியை எதிர்பார்த்து நான் காத்திருக்க வில்லை. கட்சிமேலிடம் எனக்கு எந்த பதவியை அளித்தாலும், அதை ஏற்றுக்கொள்வேன்.

ரயில்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான காரணம் பட்ஜெட்டின்போது பொதுமக்களுக்கு தெரியவரும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே ரயில்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார் எடியூரப்பா.

Leave a Reply