தமிழகத்தில் பிரெஞ்ச்மொழி படிக்கும்போது ஏன் இந்தி படிக்க கூடாது? என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் சுப.உதயகுமார் தலைமையில் வந்தவர்கள் என்னை சந்தித்தனர். அணு உலை எதிர்ப்புபோராட்டம் பற்றியும், கூடங்குளத்தில் 3, 4 அணு உலைகளை தொடங்ககூடாது என்றும், அவற்றை மூடவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மக்கள்நெருக்கடி மிகுந்த இடத்தில் அணு உலைகள் வரக்கூடாது என்று ஆரம்பத்தில் பாஜக. சார்பில் போராட்டம் நடத்தினோம். யாரும் அப்போது எங்களது போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. அணு உலை இப்போது தொடங்கப்பட்டு விட்டது. நாட்டின் வெளியுறவு கொள்கையில் தினமும் மாற்றம் கொண்டுவந்து கொண்டே இருக்கமுடியாது. மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகத் தான் இப்போது உறுதியளிக்க முடியும்.

இந்து இயக்க தலைவர்கள் ஆடிட்டர் ரமேஷ், சுரேஷ் குமார் என்று அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை முறையாக கண்டுபிடிக்கவில்லை என்பதையே இதுகாட்டுகிறது. மூன்று, நான்கு பேர் சேர்ந்து இதனை செய்யவில்லை. இதன் பின்னணியில் மிகப் பெரிய கூட்டமே இருக்கிறது.

தமிழக அரசு இதில் தனிகவனம் செலுத்த வேண்டும். ரயில்கட்டண உயர்வு என்பது தேர்தலுக்கு முன்பே இருந்த மத்திய காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது ஆகும். இந்த கட்டண உயர்வு மக்களுக்கான தண்டனை இல்லை. நாட்டின் வளர்ச்சியில் எல்லோரும் பங்களிப்பு செய்யவேண்டும்.

இந்தி திணிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ்படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் எந்த அளவு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆங்கிலமும், இந்தியும் பிழைப்புமொழிகள். தமிழகத்தில் பிரெஞ்ச் மொழி படிக்கும்போது இந்தி ஏன் படிக்ககூடாது? மனித உரிமை பற்றி பேசுகிறோம். மாணவர் உரிமை பற்றி ஏன் பேசக்கூடாது. தமிழக மாணவர்கள் விரும்பும் மொழியை படித்தால் அவர்களை தண்டிக்க உரிமை இல்லை. இந்தியை விரும்பிபடிப்பதை எதிர்க்கக் கூடாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply