பிரதமர் நரேந்திரமோடி குறித்து பேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து உளவுபிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உ.பி.,யை சேர்ந்த வாலிபர் இன்சமாம் கத்ரி என்ற பெயரில் பேஸ்புக்கில் வெளியான தகவலில், மோடியின் தாயாரை நாங்கள்கடத்தினால், அவர் நாங்கள் கூறும் எதனையும் செய்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தகவல் வெளியானவுடன் இதுகுறித்து குஜராத் மாநில போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து காந்தி நகரில் தங்கியிருக்கும் மோடியின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டன. பேஸ்புக்கருத்து குறித்து பதிலளிக்க மாநில காவலர்கள் மறுத்துள்ளனர்.

இந்த பேஸ்புக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேஸ்புக்கில் இருந்து அந்த கருத்து நீக்கப்பட்டது. உத்தரபிரதேச போலீசாரும் இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர். மாநில உளவுபிரிவு மற்றும் உள்துறை அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Leave a Reply