நக்சல் பாதித்த மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரும் வெள்ளிக் கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

தலைநகர் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் சத்தீஸ்கர், ம.பி., உள்ளிட்ட ஒன்பதுமாநில உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபின்னர் நடைபெறும் இந்த முதல் கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி, தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளின் தற்போதைய நிலைகுறித்தும், அதனை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி புதிய வரைவு திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பாகவும் இதில் ஆலோசிக்கப்படுகிறது. நாட்டில் ஒடிஷா, பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, ஜார்கண்ட்,ஆந்திரா உட்பட ஒன்பது மாநிலங்கள் நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஆகும்.

Leave a Reply