டிவிட்டர் கணக்கில் தன்னை பின் தொடர் பவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி முந்திவிட்டார் .

இந்திய பிரதமர் நரேந்திரமோடி, சமூக வலை தளங்களின் மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்வதில், இந்திய அரசியல் தலைவர்களிலேயே முன்னிலை வகிக்கிறார்.

இதன் காரணமாகவே, இளைஞர்களை கவரும் தலைவராக மோடி இருக்கிறார். அந்தவகையில் டிவிட்டரில் மோடி புதியசாதனை படைத்துள்ளார். அதாவது, மோடியின் டிவிட்டர் கணக்கை தற்போது 4,981,574 பேர் பின் தொடர்கின்றனர். அதே வேளையில், அமெரிக்க வெள்ளைமாளிகையின் டிவிட்டர் கணக்கை 4,979,707 பேர் பின் தொடர்கின்றனர். அந்தவகையில், சுமார் இரண்டாயிரம் பின் தொடர்பவர்களை இந்திய பிரதமர் மோடி அதிகம்பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அதேபோல் மோடியின் பேஸ்புக்பக்கத்தை 18 மில்லியனுக்கு அதிகமானோர் லைக்செய்துள்ளனர்.

டிவிட்டரில் அதிகம் பின்தொடரும் தலைவர்களின் வரிசையில் மோடி தற்போது நான்காம் இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு மே மாதம் 6வது இடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply