ராஜ்தானி விரைவுரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பீகாரில் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்துள்ளனர். ரெயில் விபத்தை அடுத்து அங்கு ரெயில்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி-திப்ரூகர் ராஜ்தானி விரைவு ரயில்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய பிரார்த்தனை செய்வதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவுடன் தொடர்பில் இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply