சீமாந்திராவில் ராஜ்யசபா எம்பி. தேர்தலில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தா ராமனை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததை தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத அவர், 6 மாதத் திற்குள் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ராஜ்ய சபா உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், ஆந்திரமாநில காங்கிரஸ் தலைவரும், டெல்லி ராஜ்ய சபா உறுப்பினருமான ஜனார்த்தனரெட்டி மரணம் அடைந்ததை தொடர்ந்து, அங்கு ஜூலை 3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்தது. இதையடுத்து, நிர்மலா சீதாராமன் ஆந்திரமாநில சட்டசபை செயலாளரிடம் தனது வேட்பு மனுவை கடந்த 21ம் தேதி தாக்கல்செய்தார். இந்ததேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், நிர்மலா சீதாராமன் தவிர வேறுயாரும் மனுதாக்கல் செய்யவில்லை. எனவே, நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து வரும், ஜூலை 7ஆம் தேதி நாடாளுளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அப்போது ராஜ்ய சபா கூடும்போது, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி, நிர்மலா சீதாராமனுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

Tags:

Leave a Reply