இயற்கை எரிவாயு விலை நிர்ணயகொள்கை தொடர்பாக எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை, எரிவாயு விலைக் கொள்கை குறித்து மேலும் விவாதித்து 3 மாதத்துக்குபின் முடிவெடுக்கப்படும் என்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பெட்ரோலிய அமைச்சர் பிரதான் தெரிவித்தார்.

நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் எரிவாயு யூனிட் ஒன்றுக்கு 4.2 டாலர் தரப்படுகிறது. ஒருயூனிட் எரிவாயு விலையை 8.4 டாலராக உயர்த்த முந்தைய அரசு முடிவு செய்திருந்தது . தேர்தல் குறுக்கிட்டதால் எரிவாயு விலையை உயர்த்தும்முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக. அரசு முடிவை 3 மாதம் தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply