மத்திய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக சில மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்படளாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டீஸ்கர், உத்தர பிரதேச கவர்னர்கள் ஏற்கனவே பதவி விலகிவிட்டனர். இதைத்தொடர்ந்து, கோவா கவர்னர் வான்சூ, மேற்கு வங்க கவர்னர் நாராயணன் ஆகியோர் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகதா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், சிபிஐ இவர்களை சாட்சியாக விசாரிக்க உள்ளது.

இந்நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ”பட்ஜெட் தொடருக்கு முன்பாக சிலமாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம் நடைபெற வாய்ப்புள்ளது. 3 அல்லது 4 நாட்களுக்குப்பிறகு அது குறித்து உங்களுக்கு சொல்கிறேன். கோவா கவர்னர் வான் சூவும், மேற்கு வங்க கவர்னர் எம்.கே. நாராயணனும் பதவியில் தொடர்வார்களா என்பது குறித்து தற்போது சொல்லமுடியாது” என்றார்.

Tags:

Leave a Reply