பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஒருமாத காலம் முடிவடையும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய வலைப்பூவில் கருத்தை பதிவுசெய்துள்ளார்.

அதில் அவர் எழுதியுள்ளதாவது: –

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற 100 மணி நேரங்களிலேயே பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டேன். ஒவ்வொரு புதிய அரசுக்கும் தற்போது மீடியாநண்பர்கள் தேனிலவு காலம் என்று அழைக்கக் கூடிய ஒரு காலவரம்பு உண்டு.

இதற்குமுந்தைய காங்கிரஸ் அரசு தங்கள் வசதிக்கேற்ப அந்த தேனிலவு காலத்தை 100 நாட்களாக நீட்டித்துக் கொண்டனர். ஏன் அதற்குமேலும் கூட நீட்டித்துக் கொண்டார்கள்.

ஆனால், அவர்களைபோல எனக்கு எந்த வசதியான காலமும் கிடைக்கவில்லை. இது ஒன்றும் நான் எதிர் பார்க்காதது அல்ல. ஏற்கனவே எதிர்பார்த்தது தான். 100 நாட்களை விடுங்கள். வெறும் 100 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றச்சாட்டுகள் எழத்துவங்கி விட்டன. ஆனால், எங்களுக்கு மக்களை திருப்திசெய்யும் வகையில் ஆட்சிசெய்வதே முக்கியமான இலக்கு. இதெல்லாம் ஒரு பொருட்டல்ல.

67 ஆண்டுகால முந்தைய ஆட்சி ஒரு மாத கால இந்த ஆட்சியுடன் ஒப்பு நோக்கத் தக்கதல்ல. எங்கள் அரசு முழுதுமே ஒவ்வொரு கணமும் நாட்டு மக்களின் நலனுக்காகவே பாடுபட்டு வருகிறது.. ஆட்சி நிர்வாகம் குறித்து நான் யாரையும் குறைகூறமாட்டேன். ஆனால், மக்களிடம் சரியான விஷயங்களை, சரியானநேரத்தில் கொண்டுசெல்ல தொடர்புகளை இன்னும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.

Leave a Reply