உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்க்கும் திட்டம் ஏதும் இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா, பிரேசில், இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் கலந்துகொள்ளும் பிரிக்ஸ் மாநாடு பிரேசிலின் போர்டாலேசா நகரில் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 17ம் வரை நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜூலை 13ம் தேதி ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை காணும்படி, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரேசில் அதிபர் தில்மா ரூஷேப் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை பார்க்கும் திட்டம் எதுவும் பிரதமரின் அலுவல்களில் இல்லை என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply