நாடாளுமன்றத்திலும், வெளியிலும் நன்னடத்தையை கடை பிடிக்குமாறு முதல்முறை பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பிக்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த பயிற்சிகளை வழங்கும் பயிலரங்கம் டெல்லியில் நேற்று தொடங்கியது.

பயிற்சிமுகாம் நடக்கும் இடத்திற்கு, காலை, 8:30 மணிக்கு வந்த, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் ங்குடன் இணைந்து, பயிற்சி முகாமை துவக்கிவைத்து பேசினார், பார்லிமென்டில் எப்படிப்பட்ட நல்ல கேள்விகளை கேட்கவேண்டும், பூஜ்ஜிய நேரத்தில், எப்படிப்பட்ட பொதுமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்ப வேண்டும் என்பன குறித்து, எம்.பி.,க்களுக்கு விவரிக்கப்பட்டது.

பிரதமர் மோடி பேசியதாவது:பாஜக புதிய எம்.பி.,க்கள், நன்னடத்தை, ஒழுக்கம் மற்றும் நல்ல சிந்தனைகளுடன் செயல்படவேண்டும். பொதுவாழ்வில் தரத்தைப் பேணிக்காக்க வேண்டும். புதிய அரசின் நல்லாட்சி குறித்தசெய்தியை, மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும.

நாம் எல்லாம் குடும்பம் போன்றவர்கள்; அனைவரும் ஒருபொதுவான லட்சியத்திற்காக பாடுபடுகிறோம்.புதிய நண்பர்களை உருவாக்க, ஒருவரிடமிருந்து மற்றொருவர் பாடம் கற்கவேண்டும். புதிய பொதுவுடமை சிந்தனையை உருவாக்க வேண்டும்.பல ஆண்டுகளாக, காங்கிரஸ் பின்பற்றிய கொள்கைகளால், மக்களின் துயரங்கள் போகவில்லை; அவர்களின் பிரச்னைகள் தீரவில்லை என்பதை, மக்களிடம் எம்பி.,க்கள் எடுத்துச்சொல்ல வேண்டும்.எம்.பி.,க்கள் ஒவ்வொருவரையும், பொதுமக்கள் கவனிக்கின்றனர் என்பதால், அவர்கள் பார்லிமென்டிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல முறையில் செயல்படவேண்டும்.
எதிர்க்கட்சியாக இருந்த, பாஜக., ஆளும் கட்சியாகி உள்ளதால், எம்பி.,க்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அந்தப்பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.என்று அவர் பேசினார்.

Leave a Reply