மத்திய அரசிடம் பெரும்பாலான மாநிலஅரசுகள், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கடுமையாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளன. டெல்லியில், நேற்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் வருவாய்த் துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திலுள்ள சிலவிதிகள் கடுமையாக இருப்பதாகவும், இதனால் தொழில் முதலீடுகளுக்காக நிலங்களை பெறமுடிவதில்லை எனவும் பல்வேறு மாநில அமைச்சர்கள், புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட விதிகளை திருத்தியமைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறுகையில், ‘சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது . அதற்குக் காரணம் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டவிதிகள் கடுமையாக இருப்பதே ஆகும். இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply