நிர்வாக ரீதியாக எந்த மாதிரியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்பதை நரேந்திரமோடி தெளிவாக தெரிந்துகொள்கிறார். அந்தவகையில் மோடி சிறந்தவரே என்று பொருளாதார மேதை அமர்த்தியா சென் பாராட்டியுள்ளார்.

நீண்ட நாட்களாகவே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துவந்த நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென், தற்போது மோடி மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

வரும் 10ம் தேதி பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நரேந்திரமோடியின் ஆட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள அமர்த்தியாசென்,”மோடி பிரதமரான பிறகு நான் இந்தியாவிற்கு வரவேயில்லை. ஆனால், நிர்வாக ரீதியாக அவர் என்னென்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்பதை தெளிவாக தெரிந்துகொள்கிறார். அந்த வகையில், மோடி சிறந்தவர்.

தேர்தலில் மோடி வெற்றிபெற்று பிரதமராவதில் எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. ஆனால், அவர் வெற்றிபெற்று பிரதமராகி விட்டார். ஒருஜனநாயக இந்திய குடிமகன் என்ற முறையில் மோடியை மதச்சார்பற்ற ஆட்சி நடத்த அனுமதிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கை ஒருபொருட்டே அல்ல. ஆனால், ஆசிய நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இந்தியாவின் தோல்விக்கான அடிப்படை காரணங்கள் புதிய அரசின் அஜெண்டாவில் உள்ளது . இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. அனைத்து மக்களுக்கும் கருத்துச்சுதந்திரம் உண்டு” என்றார். –

Leave a Reply