குமரி மருத்துவ கல்லூரியை நவீனப்படுத்த மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனிடம் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை இணை அமைச்சர். பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை சந்தித்து கன்னியா குமாரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை செய்யவேண்டிய பணிகள் குறித்து விவாதித்தார்.

அப்போது கன்னியா குமாரி மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் சகலவசதிகளுடன் கூடிய நவீன இருதய அறுவை சிகிச்சை, கிட்னி, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை நவீனசிகிச்சை மூலம் குணப்படுத்தவும், புற்று நோய் மருத்துவ நிலையம் அமைக்கவும் கேட்டுக்கொண்டார். இதற்கு விரைவில் அனுமதி அளிப்பதாக டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் உறுதி தந்தார் .

Leave a Reply