அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி உரையாற்ற அழைக்கப்பட வேண்டும் என அந்நாட்டு எம்.பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று மோடி செப்டம்பர்மாதம் வாஷிங்டன் செல்விருக்கிறார் என்பதால் அந்தசமயத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்ற மோடியை முறைப்படி அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையுடன் ப்ராட்ஷெர்மன், டெட் போ மற்றும் எனி ஃபலியோ ஆகிய உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே இருக்கும் நல்லுறவின் அடிப்படையிலும், இருநாடுகளும் பலவிவகாரங்களில் ஒரேகோட்பாடுகளை கொண்டுள்ளன என்ற அடிப்படையிலும் மோடியின் உரையை கேட்பது முக்கியமாகிறது என உறுப்பினர்கள் அந்தகடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

கடந்தவாரம் செனட் அவையின் மூத்த குடியரசுக்கட்சியின் பிரதிநிதியான ஜான் மெக்கெய்னும், கடந்த மாதம் முன்னணி உறுப்பினர்கள் இருவரும் இதேவிருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply