பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் மாதம் ஒரு முறையேனும் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்குவந்து, கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறியவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தினை வலியுறுத்தினார். கட்சிக்கும், அரசுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் இந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கட்சித் தொண்டர்களின் குறைகளையும், கருத்துகளையும் அமைச்சர்கள் கேட்டறிவதன் மூலம், அரசின் செயல்பாட்டை மேம்படுத்தமுடியும் என இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Leave a Reply