பிரதமர் நரேந்திரமோடி தனது செல்போன் எண்ணை உயர் அதிகாரிகள், சில மாநில ஆளுநர்களுக்கு தந்ததுடன் மத்திய அமைச்சர்களின் செல்போன் எண்களையும் வாங்கி வைத்துள்ளாராம். பிரதமர் நரேந்திரமோடிக்கு வேலைகள் குறித்த நேரத்தில் நடக்கவேண்டும். எனவே அமைச்சர்களும் , அரசு உயர் அதிகாரிகளும் கொடுக்கும் வேலையை குறித்த நேரத்திற்குள் செய்து முடித்து விடுகிறார்கள்.

இந்நிலையில் மோடி தனது செல்போன் எண்ணை முக்கிய அரசு உயர்அதிகாரிகள், அரசியல் தொடர்புள்ளவர்கள் மர்றும் சிலமாநில ஆளுநர்களுக்கு அளித்துள்ளார். துரிதமாக வேலைகள் நடக்கிறதா என்பதை அவ்வப்போது தெரிந்துகொள்ளத்தான் இந்த ஏற்ப்பாடு.

மேலும் அவர் மத்திய அமைச்சர்களின் செல்போன் எண்களையும் வாங்கிவைத்துள்ளார். இதையடுத்து அவர் அமைச்சர்களை அவ்வப்போது தொடர்புகொண்டு வேலை குறித்து பேசிவருகிறார்.

Leave a Reply