பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு, மத்திய தொழிற்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வெள்ளிக்கிழமை திடீர் வருகைதந்தார். நினைவடத்தில் வழிபாடும், பூஜை அறையில் தியானமும் செய்தார்.

தமிழக பாஜக. தலைவரும் , மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், பசும்பொன் தேவரின் தீவிரபக்தராக இருந்துவருகிறார். தேவரின் ஆன்மீகமும், அரசியலும் இணைந்து ஒப்பற்றவாழ்ககையை பொன்.ராதாகிருஷ்ணனும் கடைப்பிடித்து வருகிறார்.

நீண்ட காலமாக பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு அவர் அவ்வப்போது வந்து பூஜைகள் செய்வதும், தேவரின் பூஜை அறையில் அமர்ந்து தியானம் செய்வதும் வழக்கம் .

இந்நிலையில் அக்.30-ல் நடைபெறும் தேவரின் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணனும் வந்து கலந்து கொள்கிறார். தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சமயம், பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்து வணங்கிச்சென்றார். தேவரின் ஆசியால் பா.ஜ. வெற் பெறும். தானும் வெற்றிபெறுவேன்…தேர்தலுக்குப் பின்பு தேவர் ஐயாவிற்கு நன்றிதெரிவிக்க வருவேன் என்று நம்பிககையுடன் சொல்லி விட்டுச்சென்றார்.

அதன்படி பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு மதுரையில் இருநது புறப்பட்டு, திடீரென்று பொன்.ராதா கிருஷ்ணன் வருகை தந்தார். தேவர் நினைவிட மேடையில் நெய்விளக்குகளை அமைச்சர் ஏற்றிவைத்து, பூஜையில் சுமார் அரைமணி நேரம் கலந்துகொண்டார். பின்னர் தேவர் வாழ்ந்த வீட்டிற்குள் அமைச்சர் சென்று, தியான அறைககுள் சுமார் முக்கால் மணிநேரம் அம்ர்ந்து, தியானம் செய்தார். மொத்தத்தில் 2 மணிநேரம் தேவர் நினைவிடத்தில் அமைச்சர் இருந்துவிட்டு அபிராமம் அருகே குட முருட்டியில் உள்ள ஸ்ரீஐயப்பன் சுவாமி ஆலயத்திற்கும் ஸ்ரீ சாது சற்குரு சுவாமி ச்ன்னிதானத்திற்கும் சென்று வணங்கினார். பின்னர் அமைச்சர் திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply