சிறிதும் காலதாமதமின்றி இந்திய செவிலியர்கள் 46 பேரின் உயிருக்கு ஆபத்து இன்றி உடனே மீட்டதற்கு நன்றி என்று தேமுதிக. தலைவர் விஜயகாந்த், பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

தேமுதிக. தலைவர் விஜயகாந்த், பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:-

ஈராக் நாட்டில் திக்ரித் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய செவிலியர்கள் 46 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் வருபவர்களின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பதறிக் கொண்டிருந்தனர். அந்த வேளையில், அவர்களை பத்திரமாக மீட்டுத்தரும் பொருட்டு அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு, கடத்தப்பட்டிருந்த செவிலியர்களுக்கு நம்பிக்கை தரும்வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தும், சிறிதும் காலதாமதமின்றி, அவர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, இந்தியா வந்துசேருவதற்கு தேவையான போக்குவரத்து மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதந்த தங்களுக்கும், தங்கள் தலைமையிலான மத்திய அரசிற்கும் தேமுதிக. சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என்று கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply