மத்திய அரசின் விடாத முயற்சியால் தான் ஈராக்கில் இருந்து நர்ஸ்களை பத்திரமாக அழைத்து வரமுடிந்தது” என கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். ஈராக்கில் இருந்து மீட்கப்பட்ட 46 நர்ஸ்கள் தனிவிமானம் மூலம் நேற்று கொச்சி அழைத்து வரப்பட்டனர். இவர்களை கேரளமுதல்வர் உம்மன் சாண்டியும், அமைச்சர்களும் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர், உம்மன்சாண்டி கூறியதாவது:ஈராக்கில் இருந்து நர்ஸ்களை பாதுகாப்பாக அழைத்துவருவதற்காக நானும் அமைச்சர்கள் சிலரும் 2 நாட்களாக டில்லியில் முகாமிட்டு இருந்தோம். நானும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாசுவராஜும் பலமுறை ஆலோசனை நடத்தினோம். முடிவில் மத்திய அரசின் தீவிர முயற்சியின் காரணமாக நர்ஸ்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர். சுஷ்மா சுவராஜின் கடும்முயற்சி பாராட்டத்தக்கதாகும்.

ஒருகட்டத்தில் இந்தியர்களை அழைத்துவர சென்ற ஏர் இந்தியா விமானத்தை ஈராக்கின் இர்பில் விமான நிலையத்தில் இறக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விமானத்தை இந்தியாவிற்கு திருப்பி கொண்டுவரும் நிலை உருவானது. ஆனால், மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக விமானத்தை இறக்கி நர்ஸ்களை மீட்டுவரமுடிந்தது. கேரளா திரும்பியுள்ள நர்ஸ்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். அவர்களுக்கு உடனடியாக வேலைகொடுப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. என்று உம்மன்சாண்டி கூறினார்.

Leave a Reply