விவசாயிகளின் நலனுக்காக, டிடி – கிசான் என்ற பெயரில், விரைவில், 24 மணிநேர, டிவி சேனல் துவக்கப்படும், என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை கூறுவதற்காக, விரைவில் பிரத்யேக, டிவி சேனல் துவக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

டிடி – கிசான் என்றபெயரில் செயல்படவுள்ள இந்தசேனலில், வானிலை முன் அறிவிப்புகள், எச்சரிக்கைகள், அணைகளில் உள்ள தண்ணீர் இருப்புவிவரம், விதைகள், உரங்கள் ஆகியவை தொடர்பான முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட துறைகளின் முக்கிய நிபுணர்கள், இந்த ஆலோசனைகள் வழங்குவர். இந்தசேனல், 24 மணி நேரமும் இயங்கும்.

பிரசார் பாரதியுடன் இணைந்து, இதற்கான இறுதிக் கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளோம். புதியசேனல் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளிவரும் . 11 பிராந்திய மொழிகளில் இந்த, டிவி சேனல் ஒளிபரப்பாகும்.என்று , அவர் கூறினார்.

Leave a Reply